Photos

Description

  • நாகர்கோவில் மாநகரில் மிக பிரபலமான ஹெல்த் இன்சூரன்ஸ் உங்கள்  Star Health And Allied Insurance Co.LTD.
  • எங்களிடம் இன்சூரன்ஸ் செய்வதன் மூலம் இந்தியா முழுவதும் எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம்.
  • இங்கு இருபத்தினான்கு மணி நேரமும் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.

DETAILS

  • இன்றைய வாழ்க்கைக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸின் அவசியம்:
  • ஆரோக்கியமே வளமான வாழ்க்கை, அந்த வாழ்க்கை மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும்.
  • எதிர்பாராத விபத்து ஏற்படும் சமயத்தில் மருத்துவ செலவிற்காக பணத்திற்காக ஓட வேண்டிய அவசியம் இருக்காது.
  • இன்ஷூரன்ஸின் அடிப்படை குண நலமே எதிர்பாராத சூழலில் கை கொடுப்பதுதான்.
  • மருத்துவ காப்பீட்டு அட்டை இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் திடீர் மருத்துவ செலவில் இருந்து விடுதலை பெறலாம்.
  • மிகக் குறைவான பிரீமியத்தில் அதிகமான கவரேஜ் தரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மெடிக்கல் இன்ஷூரன்ஸ்.
  • குறைந்தது பத்து வருடத்தில் எந்த மருத்துவ செலவுகளும் இல்லாமல் வாழ்க்கை நடத்திட முடியுமா?
  • நாம் சிறுக சிறுக சேமித்த பணம் எதிர்பாராத மருத்துவ செலவுகளினால் கரைந்து விடுகிறது. எதிர்பாராத் அம்மருத்துவ செலவுகளின் மூலம் ஏற்படும் கடன் சுமைகளில் இருந்து மெடிக்கல் இன்ஷூரன்ஸ் நம்மை பாதுகாக்கிறது.

மெடிக்கல் பாலிசியின் சிறப்பு அம்சங்கள்:

  • நம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தாமலே சிகிச்சை பெறும் வசதி.
  • குடும்பமாகவோ, தனியாகவோ, கூட்டாகவோ காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்கள் சலுகை கட்டணத்தில் காப்பீடு செய்து கிளைம் பெறலாம்.
  • 5 மாத குழந்தைகள் முதல் 74 வயது வரை உள்ளவர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • 51 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து காப்பீடு வழ்ங்கப்படும்.
  • விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் மட்டும் பாலிசி எடுத்த நாள் முதல் கிளைம் பெறலாம். மற்ற சிகிச்சைகளுக்கு பாலிசி எடுத்த 30 நாட்களுக்குப் பின் கிளைம் பெறலாம்.
  • பாலிசி எடுத்த 12 மாதங்களுக்குப் பிறகு குடல் இறக்கம், மூலம், விரை வீக்கம், குழந்தை பருவம் சார்ந்த உடல் நல குறைபாடுகள், மூக்கில் நீர் ஒழுகல் (சைனஸ்), குடல்வால், கல் அடைப்பு, சிறுநீரக கல் அடைப்பு, நாள்பட்ட சிறுநீரக வியாதிகளுக்கு கிளைம் பெறலாம்.
  • பாலிசி எடுத்த 24 மாதங்களுக்குப் பிறகு: கர்ப்பப்பை நீக்கம், கண்புரை அறுவை சிகிச்சை, மாற்று மூட்டு அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட இறக்கம், காலில் ஏற்படும் இரத்த நாள சுருட்டல், சுருட்டால் ஏற்படும் நாளவிவாத புண், குடல் அரிப்புச் சார்ந்த நோய்கள் மற்றும் நரம்பு சுளுக்கு நோய்களுக்கு கிளைம் பெறலாம்.
  • பாலிசி எடுக்கும் போது இருக்கும் நோய்களுக்கு மட்டும் 48 மாதங்களுக்கு பிறகு கிளைம் பெறலாம்.
  • 60 முதல் 74 வயது வரை உள்ளவர்கள் மருத்துவப் பரிசோதனை இல்லாமல் பாலிசி எடுக்கும் வசதி.

FEATURES

கிளைமில் கிடைக்கும் செலவுகள்:

  • மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன் 30 தினங்கள் வரை ஏற்படும் மருத்துவ செலவுகள், கிளைம் உடன் சேர்த்து வழங்கப்படும்.
  • மருத்துவமனையில் தங்கும் செலவு, மருத்துவர், செவிலியர் அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், சிறப்பு மருத்துவ நிபுணர், இரத்தம், ஆக்ஸிஜன், மருந்து மாத்திரை செலவுகள், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் செலவுகள் இவை அனைத்தும் கிளைமில் கிடைக்கும்.
  • இந்தியா முழுவதும் எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம்.
  • நேரடியான கிளைம் சரிபார்க்கும் முறை.
  • வருமான வரி 80Dயில் விதியின் கீழ் மருத்துவ காப்பீட்டு பாலிசிக்கு வருமான வரி விலக்கு ரூ.35000/- வரை உண்டு.
  • பிரசவம் சம்பந்தமான அல்லது குடும்ப கட்டுப்பாடு சம்பந்தமான எந்த மருத்துவ செலவும் கிடைக்காது. இதற்கு என்று தனியாக பாலிசி உள்ளது.
  • 24 மணி நேர இலவச மருத்துவ ஆலோசனை உள்ளது. Toll Free No: 1800-425-2255.

Listing Information

8.180931

Visited 372 times, 3 Visits today

Add a Review

Rate this by clicking a star below: